தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்த காங்கிரஸ்

by Editor / 03-06-2025 01:48:01pm
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்த காங்கிரஸ்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் சேர தேமுதிக-வுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது குறித்து இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். என்னைப் பொறுத்தவரையில் அவர்களை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றார். தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் தரப்படாததால் பிரேமலதா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 

 

Tags :

Share via