அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை - செப்., 30 வரைநீட்டிப்பு.

by Staff / 13-09-2025 09:58:02am
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை - செப்., 30 வரைநீட்டிப்பு.

தமிழகத்தில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கட்டணமில்லா தொழிற்பயிற்சி, மாதம் ரூ.750 உதவித்தொகை, இலவச மிதிவண்டி, சீருடை, பயிற்சி கருவிகள், பேருந்து வசதி என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

 

Tags : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை - செப்., 30 வரைநீட்டிப்பு.

Share via