சரக்குபாட்டிலோடு திருமண தாம்பூலக்கவர் -அதிர்ச்சியில் உறவினர்கள்.

by Editor / 01-06-2023 11:06:55pm
சரக்குபாட்டிலோடு திருமண தாம்பூலக்கவர் -அதிர்ச்சியில் உறவினர்கள்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கல்யாண தாம்பூல கவர் வழங்குவது தமிழர்களின் மரபாக இருந்துவருகிறது.இந்த தாம்பூலக்கவரில்   20ஆண்டுகளுக்கு முன்புவரை சாப்பிட்ட சாப்பாடு ஜீரணிக்கவேண்டுமென்பதற்காக பழம், வெற்றிலை, பாக்கு வழங்கவது வழக்கமாக இருந்துவந்தது.இது நாளடைவில் பொருளாதாரத்தின் அடிப்படையில்  திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு தாம்பூலப்பை பரிசளிப்பார்கள். மணமக்கள் வீட்டில் கொடுக்கும்  அந்த பையில் பழங்கள், தேங்காய், பிஸ்கெட் பாக்கெட், பாத்திரங்கள்,இனிப்புகள் என வைத்து வழங்கத்தொடங்கினர்.கொடைக்கலாமென்றால் விசிறியும் வழங்குவார்கள்.காலமாற்றத்தினடிப்படையில் 

தற்போது திருமண விழாக்களில் பசுமையை பரப்பும் முயற்சியாக தாம்பூலப் பையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. புத்தகங்களும் கூட வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பரிசுப்பொருட்கள் கொடுக்கும் திருமண வீட்டினரை உறவினர்கள் பாராட்டுகின்றனர். இப்போதோ திருமண வீடுகளில் மாப்பிள்ளையின் சார்பில் நண்பர்களுக்கும்,பெண்வீட்டில் பெண்ணின் சகோதரன் சார்பில் அவரது நண்பர்களுக்கும் மதுவிருந்தில்லாமல் இருப்பதில்லை.சடங்குவீட்டிலும்,சாவு வீட்டிலும் கூட மதுமுக்கிய இடத்தை பிடித்துள்ளது..இந்தநிலையில் புதுச்சேரியில் தாம்பூல பைகளில் முக்கிய மாக மதுபாட்டில் கொடுக்கத் தொடங்கி விட்டனர். புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் தாம்பூலப்பையில் தேங்காய், பழங்களுடன் மதுபாட்டிலும் கூடவே பிஸ்கெட் பாக்கெட்டும் கொடுத்துள்ளனர். ஒரு பெட்டி நிறைய மது பாட்டில்களை வைத்துக்கொண்டு தாம்பூல பை வாங்கும் போது ஒரு குவர்ட்டர் பாட்டிலை போட்டு கொடுத்தனர்.புதுச்சேரி திருமண வரவேற்ப்பு நிகழ்வுக்கு சென்ற உறவினர்களுக்கு மணமகள் வீட்டார் செய்த இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதேசமயம் அங்கு சென்றவர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.என்ன காரணத்திற்க்காக மதுப்பட்டில் வழங்கப்பட்டது என்பது புதிராகவே இருந்தது..கடைசிவரை..

சரக்குபாட்டிலோடு திருமண தாம்பூலக்கவர் -அதிர்ச்சியில் உறவினர்கள்.
 

Tags :

Share via