அழுகிய நிலையில் பெண் சடலம்: போலீசார் விசாரணை.

பெருந்துறை, ஈரோடு ரோடு கந்தாம்பாளையம் பிரிவிலிருந்து, டீச்சர்ஸ் காலனி செல்லும் பகுதியில் ஒரு தனியார் பள்ளி கட்டிடம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் உள்ளது. இந்தக் கட்டடத்தின் பின்பகுதி காம்பவுண்ட் சுவர் அருகே உடலில் ஆடை இன்றி அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து போன பெண் யார், அவர் இங்கு எப்படி வந்தார், உடலில் ஆடை என்று கிடப்பதால் வேறு ஏதாவது சம்பவம் நடந்திருக்கக் கூடும், என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :