காபூல் விமான நிலையத்தை சுற்றி ஏராளமான ராக்கெட்டுகள் பறப்பதால் பதற்றம்!  

by Admin / 30-08-2021 01:23:39pm
காபூல் விமான நிலையத்தை சுற்றி ஏராளமான ராக்கெட்டுகள் பறப்பதால் பதற்றம்!  


 
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தை சுற்றி ஏராளமான ராக்கெட்டுகள் பறப்பதன் சத்தம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 26 ஆம் தேதி ஐஎஸ் தீவிரவாத அமைப்பு காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க துருப்புகள் 13 பேர் உள்பட 170க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு பதிலடியாக அமெரிக்கா ட்ரோன் தாக்குதலை நிகழ்த்தியது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் உச்சபட்ச பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது இன்று அதிகாலை முதல் காபூல் விமான நிலையத்தை சுற்றி பல ராக்கெட்டுகள் பறப்பதன் சத்தம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐஎஸ் அமைப்பை குறி வைத்து அமெரிக்காவின் தாக்குதல் திட்டமா அல்லது தீவிரவாதிகளின் சதி வேலையை முறியடிக்கும் முயற்சியா என்பது தெரியவில்லை

 

Tags :

Share via

More stories