அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தம்பதியினர் கைது.

by Editor / 19-11-2021 04:19:05pm
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த  தம்பதியினர் கைது.

நெல்லை  மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைமணி மகன் அருண்குமார், அவரது மனைவி கிருஷ்ணகோகிலா ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறையில் 7 பேரிடம் 14 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விட்டதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சித்தார்த் என்பவர் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்த நிலையில், தப்பி ஓடி காரைக்குடியில் தலைமறைவாக இருந்த தம்பதியினரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.சென்னையில் இவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளதாகவும்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 பேரிடம் 38 லட்ச ரூபாய் ஏமாற்றி உள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories