வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலி

by Staff / 08-06-2022 04:24:09pm
வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியிலிருந்து தவறி விழுந்த நான்கரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் வசிக்கும் அவரது குழந்தை கோபிகாவை நேற்று மாலை பச்சையப்பன் தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி  அங்கிருந்த கம்பி மீது ஏறியபோது தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த சிறுமி கோபிகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் விசாரணையில் வீட்டில் சிறுமியின் அத்தை மட்டுமே இருந்த நிலையில் அவர் பால்கனி கதவை மூடி விட்டு குளிக்க சென்றதாகவும் அப்போது கதவை திறந்து சிறுமி விளையாட சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories

Logo