பேருந்தில் பெண் பயணி அவமதிக்கப்பட்ட விவகாரம் பேருந்து ஓட்டுநர் நடத்துநர் சஸ்பெண்ட்

கரூரில் ரேஷன் பொருள்கள் அடங்கிய மூட்டையுடன் வந்த பெண்ணே பேருந்து ஏற்றாமல் அவமதித்த விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் கோடாங்கிபட்டி சேர்ந்த பெண்கள் சிலர் 3 வயது பெண் குழந்தையுடன் ஆலமரத்துப்பட்டி நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி உள்ளனர். மூட்டையுடன் குழந்தையின் தாய் எறுவதற்கு முன்னரே ஓட்டுனர் பேருந்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அரசு பேருந்தில் பெண்களை அவமதிப்பதாக கோரி பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து பேருந்து ஓட்டுநர் பன்னிர்செல்வத்தையும் நடத்துநர் மகேந்திரனும் சஸ்பெண்ட் செய்து கரூர் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :