சுற்றுலா பயணிகள் 10 நாட்களுக்கு மாஞ்சோலை செல்ல அனுமதி.

by Editor / 28-05-2024 09:51:07am
சுற்றுலா பயணிகள் 10 நாட்களுக்கு மாஞ்சோலை செல்ல அனுமதி.

நெல்லை மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலைக்குச் செல்ல இன்று (மே 28) முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ரெட் அலர்ட் காரணமாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகளுக்கு மாஞ்சோலை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால் அடுத்த பத்து தினங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு மாஞ்சோலை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், மீண்டும் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 

 

Tags : மாஞ்சோலை

Share via

More stories