குழந்தையின் முகத்தை கடித்து குதறிய வெறிநாய்!

சென்னை அண்ணா நகரில் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தையின் முகத்தை வெறிநாய் கடித்து குதறி உள்ளது. இதையடுத்து, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிவதாக மாநகராட்சியிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் கண்ணீருடன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
Tags :