கோவிட்ஷீல்டு தடுப்பூசி விலையை குறைத்தது சீரம் நிறுவனம்
மாநிலங்களுக்குக்கான கோவிட்ஷீல்டு தடுப்பூசியின் விலையை குறைத்து சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு டோஸ் விலை ரூ.400 ஆக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஒரு டோஸ் விலை ரூ.300 ஆக நிர்ணயம் செய்து சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி விலை உயர்த்தி அறிவிக்கப்ட்டுள்ளதாகவும், சீரம் நிறுவனம் தனது கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசி விலையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடிக்கு சீரம் நிறுவனம் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி விலையை குறைக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், சீரம் நிறுவனம் மாநிலங்களுக்குக்கான கோவிட்ஷீல்டு தடுப்பூசியின் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநிலங்களுக்கான கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.400 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.100 குறைத்து மாநிலங்களுக்கான ஒரு டோஸ் விலை ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags :