தினமும் ஆதாரங்கள் அழிப்பு - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

by Staff / 04-07-2023 04:07:27pm
தினமும் ஆதாரங்கள் அழிப்பு - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அமலாக்கத்துறை வாதத்தில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் கடுமையான ஆதாரங்கள் தினமும் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் எங்களால் கடமையை செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்கிறார். செல்வாக்கு மிக்க நபரான செந்தில் பாலாஜியை உடனே விசாரிக்காவிடில் விசாரணை நீர்த்துப்போகும் என வாதத்தை முன்வைத்தது.  
 

Tags :

Share via

More stories

Logo