தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தலான  அறிவிப்பு.

by Staff / 05-07-2025 12:11:04am
தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தலான  அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்த அரசு ஊழியர்களுக்கான பணபலன் திட்டத்திற்கான அரசாணை வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் திட்டம் அமலில் இருந்து வந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பொறுப்புக்கு வந்த பின், இது குறித்தான அறிவிப்பு வரும் என அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.இந்த நிலையில், 2025 – 2026 பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.அந்த அறிவிப்பில், ஈட்டிய விடுப்பு சரண் செய்து பணப் பலன் பெறும் திட்டம் 01.04.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப் பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.ஈட்டிய விடுப்பு சரண் செய்து பணப் பலன் பெறலாம் எனும் அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அது அடுத்த ஆண்டு (2026) முதலே அமலாகும் என்ற போது வருத்தம் அடைந்து, அதனை உடனே செயல்படுத்திட கோரிக்கை வைத்தனர்.கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே ஈட்டிய விடுப்பு சரண் செய்து பணப் பலன் பெறலாம் எனவும் அறிவித்தார்.ஏப்ரல் மாதம் விதி எண் 110-ன் கீழ் இதனை அறிவித்த முதலவர் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 01:10.2025 முதல் சரண் செய்து பணப் பயன் பெறலாம் என அறிவித்தார்.அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
 

 

Tags : தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தலான  அறிவிப்பு

Share via