by Staff /
04-07-2023
04:00:19pm
தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாத நிலை உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “பருவமழை தாமதமானதால் கர்நாடகாவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம். அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது. தமிழர்கள் இங்கு வேலை செய்கின்றனர். கன்னடர்கள் அங்கு வேலை செய்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Tags :
Share via