சூழலியல் செயல்பாட்டாளர்  சுந்தர்லால் பகுகுணா மரணம் 

by Editor / 21-05-2021 05:11:30pm
  சூழலியல் செயல்பாட்டாளர்  சுந்தர்லால் பகுகுணா மரணம் 


 

திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சூழலியல் செயல்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா (94) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த சமூக ஆர்வலராக இருந்த இவர், 1970 ஆம் ஆண்டு சிப்கோ இயக்கத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

Tags :

Share via