புலியகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜே.என்.1 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோன பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்த 3 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு ஜே.என்.1 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கோவை புலியகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜே.என்.1 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளார்.
Tags : கோவை புலியகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜே.என்.1 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது