பிரேசிலில் விமான விபத்தில் 12 பேர் பலி

by Staff / 30-10-2023 02:55:24pm
பிரேசிலில் விமான விபத்தில் 12 பேர் பலி

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo