ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட போராட்டம்: அண்ணாமலை

by Staff / 30-10-2023 02:51:17pm
ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட போராட்டம்: அண்ணாமலை

திமுக ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1996 - 2001 திமுக ஆட்சியில் போக்குவரத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, 2006 - 2011 திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், அதே 2006 - 2011 திமுக ஆட்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வெவ்வேறு கால கட்டங்களில் நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்றது.

 

Tags :

Share via