முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 நிறைவுவிழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரை.
நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 நிறைவுவிழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரை.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற எல்லா வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது..அதில் குறிப்பாக, உங்கள் முகங்களை எல்லாம் பார்க்கின்ற நேரத்தில் அதிகமான உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் நான் பார்க்கிறேன். உங்கள் துறையின் அமைச்சர் ப்ரோமோஷன் அடைந்தது உங்களுக்கு எல்லாம் புது எனர்ஜியை கொடுத்திருப்ப தாகத்தான் நான் நான் பார்க்கிறேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த தம்பி மாண்புமிகு உதயநிதி அவர்கள் இப்போது துணை முதலமைச்சர் ஆனதில் உங்களுடைய பங்கும் இருக்கின்றது என்பதை நான் தெளிவாக உணர்ந்து இருக்கிறேன்..விளையாட்டு துறையை மிகச் சிறப்பாக கவனித்து இந்தியா வே உற்று நோக்கும் துறையாக தம்பி உதயநிதியின் மாற்றி காட்டியிருக்கிறார். அப்படி பார்த்தால் துறையும் வளர்ந்து இருக்கிறது துறையையும் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார்..
நாம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு பொழுது போக்காக நினைக்கும் மைண்ட் செட்டை மாற்றி ஸ்போர்ட்ஸில் ஒரு கேரியர் ஆக இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ப்ரொமோட் செய்திருக்கிறோம்.அதனால் தான் இந்திய வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 114 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தினோம் 186 நாடுகளில் இருந்து 2000க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் அந்தப் போட்டியில் பங்கேற்றார்கள் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சசிகர்கள் எல்லாம் நாம் அழைத்த வரவேற்பு குறுகிய காலத்தில் போட்டிகளை சிறப்பாக ஏற்பாடு செய்த முறை தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் அவர்களுக்கு கொடுத்த விருந்தோம்பல் என்று எல்லாவற்றையும் மனதார பாராட்டினார்கள் .அந்த செஸ் போட்டியின் துவக்க விழாவும் நிறைவு விழாவும் சோசியல் மீடியாக்களில் வைரலானது.என்றும் இன்றைய இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்கப்பட்ட எல்லா வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த வெற்றிக்காக எடுத்த முயற்சி உழைப்பு தன்னம்பிக்கை ஆக்குவத்தை பாராட்டுகிறேன். உங்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான எல்லா ஆதரவும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்ற உறுதியை இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போட்டியில் பங்கேற்கும் இளம் திறனாளர்களை கண்டறிந்து அவர்களை முறையாக ட்ரைன் செய்வது தான் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது முக்கிய நோக்கம்.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் சுமார் 11 லட்சம் வீரர்கள் வீராங்கனைகளை 36 வகையான தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 15 நாட்கள் நடத்தப்பட்ட மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போட்டி நடுவர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் .தமிழ்நாட்டு இளைஞர்களின் விளையாட்டுகளில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது என்பதை அடையாளம் தான் இது. வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கு திட்டமிட்ட முயற்சியும் கட்டுப்பாடும் அவசியம். உங்களின் வெற்றிக்கான காரணம் என்ன தெரியுமா திறமை தன்னம்பிக்கை, உழைப்பு ,கட்டுப்பாடு. அதனால் தான், நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களைப் போன்ற திறமைமிக்க வீரர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கிறது.. தமிழ்நாட்டில் சிறந்த வீரர்களா விளங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் தேசிய மற்றும் உலக அளவில் சாதிக்க வேண்டும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் இந்த போட்டிகள் உங்களின் திறமைகளை மட்டும் வழி காட்ட வில்லை.நம்முடைய விளையாட்டுத் துறையில் பணியாற்றும் கோச்சுக்களின் திறன்களையும் வெளிப்படுத்தி இருக்கின்றது. இந்த திறமைகளால் தான் விளையாட்டு துறையின் தமிழ்நாடு தனியாக மின்னுகிறது தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்களும் துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ ,சிவன் ராமதாஸ் ஆகியோரும் இந்த ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் இதில் துளசியின் தந்தை முருகேசன் அவர்கள் அப்போது அளித்த பேட்டியை நான் பார்த்தேன் அந்த பேட்டியில் சொல்கிறார் கால்நடை மருத்துவ படிப்பு படிக்கும் என்னுடைய மகள் இடையிடையே பயிற்சி செய்து பாரா ஒலிம்பிக் வரை சென்று பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று இருப்பது தமிழ்நாடு அரசின் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் துறை அமைச்சரின் முழு முயற்சி என்று சொல்லி இருக்கிறார்.
விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க எத்தனையோ திட்டங்களை நாங்கள் செயல்படுத்துகிறோம். கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிற்கும் நம்முடைய திராவிடம் முக்கியத்துவத்தை கொடுக்கிறது. நம்முடைய திட்டங்களையும் உருவாக்கி தர வாய்ப்புகளையும் பயன்படுத்தி நீங்கள் உலக அளவில் பெருமை பெற வேண்டும். இதற்கான எல்லா ஆதரவையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் .இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது விளையாட்டு என்பது வெறும் போட்டி இல்லை. அது உடல் வலிமையையும் மனவலிமையும் தரக்கூடியது. உங்கள் பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதை ஊக்கப்படுத்துங்கள். நம்முடைய ஆதரவு கிடைத்தால் போதும் அதுவே நம்முடைய பிள்ளைகளுக்கு உற்சாகமாக இருக்கும் என்று தன்னுடைய உரையை தொடர்ந்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களையும் கோப்பைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
Tags :