பாமகவிற்கு மாம்பழச்சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமகவிற்கு மாம்பழச்சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதன் காரணமாக பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழச்சின்னத்தில் போட்டியிட இயலாது என கூறப்படுகிறது. எனவே, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கும் புதிய சின்னத்தை பெற்றே இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலை பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது.
Tags :