மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

by Editor / 26-03-2025 01:17:53pm
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று மார்ச் 26 முதல் நாளை 27ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via