எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா காலத்தில் இருந்த விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது- பன்னீர்செல்வம்
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல திருமணத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவர் மணமக்களை
வாழ்த்திய பிறகு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் கழகம் வெற்றி பெறும், சாதாரண தொண்டர் கூட கழகத்தின் உச்ச பட்சபதவிக்கு போட்டியிடலாம் என்ற விதிமுறையை மாற்றி எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர் வழிமொழிய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கழக சட்ட விதிகளை திருத்தி உள்ளார். இதைத்தான் நாங்கள் கூடாது என்கிறோம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டுகாலம் கழக சட்ட விதிப்படி கட்சியை வழிநடத்தி மகத்தான வெற்றியை தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். அதைத்தான் நாங்களும் வழிமொழிகிறோம் என்றார். தொண்டர்கள் பொதுச் செயலாளர் பதவியை தேர்ந்தெடுப்பதாக நீதிமன்றம் அறிவித்தால் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு ஏற்கனவே இது குறித்து கூறியிருக்கிறோம், கழகத்தின் சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கும்,உறுப்பினராக இருப்பவரை புதுப்பிப்பதற்கும் கழக சட்ட விதிகள் உள்ளது. இந்த விதிகள் தான் எம்.ஜி.ஆர். காலத்தில் ஜெயலலிதா காலத்தில் இருந்த விதிகள். இந்த விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது பழைய விதிகள் தொடர்ந்தால் நான் போட்டிடுவேன் என்றார்.
Tags :