திமுக கூட்டணியில் விசிகவுக்கு கேட்டது கிடைக்குமா..?

by Editor / 02-03-2024 09:42:04am
திமுக கூட்டணியில் விசிகவுக்கு கேட்டது கிடைக்குமா..?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே சிபிஐ, சிபிஎம், கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. இந்த நிலையில், விசிகவுடன் இன்று திமுக 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

திமுக - விசிக தொகுதி உடன்பாடு இன்று உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று 2ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 3 தனித்தொகுதி, 1 பொது தொகுதியை விசிக வலியுறுத்தியதால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் இடங்களை இறுதி செய்ய இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டுவார்கள். விசிகவிற்கு சிதம்பரம் தொகுதியோடு மேலும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

அதே போல், பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சியுடனும் திமுக இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 2014 மக்களவை தேர்தலில் மமகவுக்கு ஒரு சீட் வழங்கிய நிலையில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டது. 2019 தேர்தலில் சீட் வழங்கவில்லை. ஆனால் இந்த முறை ஒரு சீட் நிச்சயம் பெற வேண்டும் என்பதில் மமக உறுதியாக உள்ளது.

அதே போல், தவாக சார்பில் எம்எல்ஏ வேல்முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட் வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மதிமுகவுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கவே வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : திமுக கூட்டணியில் விசிகவுக்கு கேட்டது கிடைக்குமா..?

Share via