தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரைக்கான இடம் தேர்வு செய்வதில் இழுபறி..?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரப்புரை செய்யவுள்ளார். இந்நிலையில், பரப்புரைக்கான இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்தூர் ரவுண்டானாக்கு பதிலாக புத்தூர் அண்ணா சாலை பகுதியில் பரப்புரை செய்ய அனுமதி தருமாறு தவெக-வினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, பரப்புரைக்கு பல கட்ட நிபந்தனைக்கு உட்பட்டு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரைக்கான இடம் தேர்வு செய்வதில் இழுபறி..?