IT பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு காவலரையும் தாக்கிய 3 பேரை CCTV காட்சிகள் அடிப்படையில் கைது

சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ஹோட்டல் அருகே சாலையோர டீ கடையில் இரவு பணிக்கு செல்ல காத்திருந்த IT பெண் ஊழியர்கள் மோனிஷ் மற்றும் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பீணா இவர்கள் சென்னை போரூரில் உள்ள DLF IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் வழக்கம் போல் இரவு வேலைக்கு செல்ல CABற்காக நின்று கொண்டிருந்த பொழுது அங்கு ஹூண்டாய் i20 காரில் வந்த போதை ஆசாமிகள் 3 பேர் மோனிஷா மற்றும் பீணாவிடம் வீண் தகராறு செய்து வீணாவின் கையில் இருந்த 25,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை கேட்டு கையால் அடித்து செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்து கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
இதைப் பார்த்து பயந்து போன பெண் பீணா காவல் கட்டுப்பாட்டு அறை என்100 தகவல் கொடுத்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பத்தூர் காவலர் பிரபாகரனிடம் பாதிக்கப்பட்ட பெண் நடந்ததை கூறிய நிலையில் சம்பவ இடத்தில் அருகே உள்ள டீக்கடையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மூன்று பேரிடம் காவலர் பிரபாகரன் விசாரணை நடத்தினார்அப்பொழுது போதை ஆசாமிகள் 3 பேரும் சேர்ந்து காவலர் பிரபாகரனை கையால் அடித்தும் போட்டோ எடுக்க முயன்ற அவரது செல்போனை கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது
சம்பவம் நடந்த இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமியிடம் காவலர் பிரபாகரன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த ஜூம் கார் டெலிவரி பாய் பிரபு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பிஆர்ஓ சூர்யா மற்றும் ஊரப்பாக்கத்தை சேர்ந்த முகில் செருப்பு கடை உரிமையாளர் சிவகுமார் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Tags :