சென்னையில் ஜி20 கல்விக்குழு கூட்டம்

by Staff / 16-01-2023 12:16:35pm
சென்னையில் ஜி20 கல்விக்குழு கூட்டம்

இந்த ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்குகிறது. இந்நிலையில் இந்த ஜி20 மாநாட்டையொட்டி நவம்பர் வரை நாடு முழுவதும் கூட்டம், கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஜி20 மாநாட்டிற்காக ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச கல்வியுடன் ஆராய்ந்து, இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஆலோசனைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories