by Staff /
13-07-2023
12:47:33pm
கடந்த 24 மணி நேரத்தில் அமர்நாத் யாத்திரையின் போது மாரடைப்பால் 5 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இதன் மூலம் தெற்கு காஷ்மீரின் இமயமலையில் தொடரும் இந்த யாத்திரையில் இந்த ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பாதுகாப்புப் பணிக்கு சென்ற ஐடிபிபி அதிகாரி ஒருவரும், மற்றொரு ஊழியரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிக உயரத்தில் குறைந்த ஆக்ஸிஜன் அளவு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் பிரசித்தி பெற்ற குடைவரைக் கோவிலான அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.
Tags :
Share via