அருவாள் மீது நின்று மது அருந்தி குறி சொன்ன சாமியார்
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாளிகைப்பாறை கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழா காணிக்கையாக கருப்பசாமிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட புல் மது பாட்டில்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்கள் ராவாக மதுவை குடித்து மாளிகைப்பாறை கருப்பசாமி பக்தர்களுக்கு நாடு செழிப்புடன் விலைவாசி உயர்வு குறைந்து தண்ணீர் பிரச்சினை நீங்கி செழிப்பாக காணப்படும் என அருள் வாக்கு
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மாளிகைப்பாறை கருப்பசாமி திருக்கோயில் இந்த திருக்கோயிலில் பூசாரியாக இருப்பவர் முருகன் இவர் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார் இந்த ஆலயத்தில் ஆடி மாத கொடை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் கடந்த 4ம் தேதி கால் நாட்டு விழாயுடன் துவங்கிய பூஜை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கிடா வெட்டுதல் சுவாமி அரிவாள் மேல் நின்று மதுபானம் அருந்தி அருள்வாக்கு கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சுவாமியின் அருள் வாக்கை கேட்பதற்காக ஆலய வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்த நிலையில் மாளிகைப்பாறை கருப்பசாமி யாக சாமியாடி அருள் வாக்கு கூறும் பூசாரி முருகன் சாதாரணமாக எளிமையாக வந்து மாளிகைப்பாறை கருப்பசாமியை வணங்கி பின்பு கருப்புசாமியின் உடை அணிந்து அவருக்கு மலர் மாலைகள் சூட்டப்பட்டு கையில் அருவாள் கொடுக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் கருப்பசாமி கருப்பசாமி என முழங்க மாளிகைப்பாறை கருப்பசாமியாக பூசாரி முருகன் மாறினார்
இதைத்தொடர்ந்து மாளிகைப்பாறை கருப்பசாமி நடனமாடிய கருப்பசாமி கூறிய அருவாள் மேல்நின்று பக்தர்களுக்கு காட்சியளித்ததுடன் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த ஃபாரின் சரக்கு முதல் உள்ளூர் சரக்குகளை அப்படியே ராவாக குடித்து அருள்வாக்கு கூறினார் மாளிகைப்பாறை கருப்பசாமி அருள் வாக்கு காரணமாக பலன் பெற்ற பக்தர்கள் ஆண் பெண் குழந்தைகள் இளம்பெண்கள் என ஏராளமானோர் நூற்றுக்கணக்கான புல் பாட்டில்களை சாமிக்கு காணிக்கையாக அளித்தனர் கருப்பசாமியின் அருள் வாக்கால் பலன் பெற்ற பெண் பக்தர் குடும்பத்தோடு வந்து 21 ஃபுல் பாட்டில்களை சாமிக்கு காணிக்கையாக வழங்கினார்
சுமார் இரண்டு மணி நேரம் ஆடியபடி மதுவை ராவாக பிடித்த மாளிகைப்பாறை கருப்பசாமி சைடிஸ் ஆக எலுமிச்சம் பழம் ஆட்டு ஈரல் ஆகியவற்றை பயன்படுத்தினார்
பின்னர் செய்தியாளரிடம் அருள்வாக்கு கூறிய மாளிகைப்பாறை கருப்பசாமி இந்த ஆண்டு நன்றாக மழை பெய்து நாட்டில் பஞ்சம் இல்லாமல் செழிப்பாக காணப்படும் குடிநீர் பிரச்சினை இருக்காது கருப்பசாமி அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்று கூறினார் கருப்புசாமி ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் காணிக்கையாக பணம் பெறுவேன் பெறுவது கிடையாது அவர்கள் வேண்டுதலாக கொடை விழாவின் போது மது பாட்டிலை அளிப்பது மட்டுமே காணிக்கையாக உள்ளது என்று அவர் கூறினார்
Tags :