by Staff /
13-07-2023
12:43:11pm
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2 ஆம் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் விரைவு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். 1200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மூத்த பொறியாளர் அருண் குமார் மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனை தொடர்ந்து ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 ரெயில்வே ஊழியர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :
Share via