திருமாவளவன் இந்துவா? இல்லை கிறிஸ்தவரா பேரரசு எந்த மதத்தை சேர்ந்தவர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து சமய அறநிலையத் துறையை இரண்டாக பிரிக்க வேண்டும் என சமீபத்தில் கூறிருந்தார். அதாவது சைவம், வைணவம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும் என கூறினார். திருமாவளவனின் இந்த கருத்துக்கு இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், "சாதி ஒழிய வேண்டும், சமூக நீதி வேண்டும் என்று முற்போக்காக பேசும் திருமாவளவனின் சிந்தனை அதைவிட பிற்போக்காக மாறி விட்டது. திருமாவளவனிடம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் இந்துவா? இல்லை என்றால் கிறிஸ்தவரா? இல்லை, எனக்கு எந்த மதமும் இல்லை. நான் நாத்திகர் என்றால் அதையும் வெளிப்படையாக சொல்லுங்கள். இந்து மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கேலி கிண்டல் செய்வதும் இருக்கட்டும். ஆ.ராசா, சீமான் ஆகியோரிடமும் இதையே கேட்கிறேன். நீங்கள் என்ன மதம் என்று தெரியாமல் இந்து மதத்தை இழிவுப்படுத்தக் கூடாது. இதுவரை பொறுத்துகொண்டோம். இனி பொறுக்க மாட்டோம்" என கடுமையாக பேசினார்.
Tags :