புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் தீவிபத்து - 2 பேர் பலி

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டிடத்தில் மர வேலைகள் நடைபெற்று வந்தன. அப்போது சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது. இதில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த உதய் பானு (40), பீகாரைச் சேர்ந்த ரோஷன் (23) என 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Tags :