மறக்க முடியாத தபால் (சர்வதேச தபால் தினம் -அக்.9)

by Editor / 09-10-2021 07:04:16pm
மறக்க முடியாத தபால் (சர்வதேச தபால் தினம் -அக்.9)

1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி, சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில், சர்வதேச தபால் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே, உலக தபால் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பாரீஸ் நகரில் 1653-ம் ஆண்டு தபால் பெட்டிகள் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. 1764-ல் ஆங்கிலேய ஆட்சியினரால் தொடங்கப்பட்ட இந்திய தபால் துறைக்கு, நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இதில், பெரும்பாலானவை கிராமங்களில் தான் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தபால்கள் ரயில் மூலமும் தபால் துறையின் வாகனங்கள் மூலமும் கொண்டுச் செல்லப்படுகின்றன.


போஸ்ட் கார்டு, இன்லான்ட் லட்டர் போன்றவற்றை பயன்படுத்துவது தற்போதைய சூழலில் வெகுவாக குறைந்துவிட்டாலும், பதிவுத் தபால், விரைவுத் தபால் தவிர, ஆதார், பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறுதல், சேமிப்பு கணக்கு போன்ற சேவைகளையும் தபால் நிலையங்கள் வழங்கி வருகின்றன.இன்டர்நெட், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என தொடரும் நவீன தொழில்நுட்பங்களால்,தபாலில் பெருமை குறைந்து விட்டது. 

 

Tags :

Share via