கட்சியில் இருந்து கொண்டு கடத்தல் தொழிலில் ஈடுபட்டதால் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்!. தமிழக வெற்றிக் கழகம் அதிரடி!.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பிரபல பீடி கம்பெனி தொழில் அதிபர் தியாகராஜன் என்பவரை கடந்த 23-ஆம் தேதி எட்டு பேர் கொண்ட கும்பல் கடத்தி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி 12 லட்சம் ரூபாய் பெற்று தியாகராஜனை விடுவித்த நிலையில் இது தொடர்பாக கடத்தல் வழக்கில் கைது! செய்த தமிழக வெற்றி கழகம் திருப்பத்தூர் மாவட்டம் மாணவர் அணி தலைவர் ஆசிர்நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (எ) சாண்டி என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி தலைவர் சந்தோஷ் (எ) சாண்டியை அக்கட்சியில் இருந்து பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Tags :