ரம்ஜான் தினத்தன்று சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணை படி இயக்கப்படும்

சென்னை புறநகர் ரயில்களில் கணினி முன்பதிவு மையங்கள் ஞாயிறு அட்டவணைப்படி காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். ரம்ஜான் தினத்தையொட்டி மே 3ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்கும். கணினி மயமாக்கப்பட்ட அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் காலை 8 முதல் 2 மணி வரை இயங்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Tags :