விழுப்புரத்தில் பாலியல் புகாரில் தமுமுக வர்த்தக அணி மாநில பொருளாளர் அப்துல் ஹகீம் கைது.

by Staff / 08-08-2025 10:56:02am
விழுப்புரத்தில் பாலியல் புகாரில் தமுமுக வர்த்தக அணி மாநில பொருளாளர் அப்துல் ஹகீம் கைது.

விழுப்புரம் அய்யன் கோவில் பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் உரம் தயாரிப்பு நிறுவனமான எஸ்.எம்.ஏ நிறுவன நிறுவனர் அப்துல் ஹக்கீம் (தமுமுக வர்த்தக அணி மாநில பொருளாளர் பொறுப்பில் உள்ளார்என்று கூறப்படுகிறது ) இவர்  மீது, பணியாற்றும் பெண் ஊழியர் களுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயது இளம் பெண்ணுக்கு, ஹக்கீம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிட, அங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்துவந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நிறுவனத்தில் முற்றுகை இட வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஆத்திரமடைந்த அவர்கள், கம்பெனியின் கண்ணாடிகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.

இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹக்கீமை கைது செய்தனர். விசாரணையில் அவர் குற்றம் செய்தது உறுதியானது. மேலும், அவர் இதேபோன்று எட்டுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்து, வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளும் அனுப்பியிருந்தது தெரியவந்தது.

போலீசார் அவரது மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம், இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறிய பொழுது கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ஹாக்கீமை கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் மேலும் இவர் நடத்தி வரும் இந்த உற கம்பெனிக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : விழுப்புரத்தில் எஸ்.எம்.ஏ உரம் தயாரிப்பு நிறுவனர் அப்துல் ஹக்கீம்  பாலியல் புகாரில் கைது.

Share via