“தமிழகத்திற்கு தரவேண்டிய நிதி எங்கே?” - செல்வகணபதி எம்பி கேள்வி
மக்களவையில் பேசிய சேலம் எம்பி செல்வகணபதி, “தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு மேலாக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்கவில்லை. ஆயிரக்கணக்கான பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்கி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதி மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என காட்டம் தெரிவித்தார்.
Tags :