மூதாட்டி கூட்டுப் பாலியல் பலாத்காரம்

by Editor / 27-03-2025 04:08:30pm
 மூதாட்டி கூட்டுப் பாலியல் பலாத்காரம்

கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 65 வயது மூதாட்டியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனியாக வசித்து வரும் இந்த மூதாட்டி, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது வீட்டின் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை மூதாட்டி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் திடீரென அவரைத் தாக்கி கீழே தள்ளினர். 

பின்னர், மூதாட்டி என்றும் பாராமல் அவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கதறித் துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அந்த வடமாநில தொழிலாளர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களைச் சுற்றி வளைத்து அக்கம்பக்கத்தினர் பிடித்தனர். ஆனாலும் ஒருவர் தப்பி ஓடினார். மீதமுள்ள 2 பேரை பிடித்து கோவில்பாளையம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

பின்னர் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய நபரையும் காவல்துறையினர் தேடிப் பிடித்து நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via