தோண்ட தோண்ட ஐம்பொன் சிலைகள், பொருள்கள் கண்டெடுப்பு

by Staff / 14-06-2024 11:55:27am
தோண்ட தோண்ட ஐம்பொன் சிலைகள், பொருள்கள் கண்டெடுப்பு

தஞ்சாவூர் பாபநாசம் தாலுக்கா கோவில்தேவராயன்பேட்டை மச்சபரீஸ்வரர் சிவன்கோவில் அருகே ஆபிஸர்நகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது பைசல் (43). இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோன்டினார். இரண்டு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், மூன்றாவது குழி தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக முகமது பைசல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் அங்கு ஐம்பொன்னால் செய்யப்பட்டிருந்த சோமஸ்கந்தர், சந்திரசேகரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சிலைகளையும், தூபக்கால் போன்ற பொருள்களான தட்டு, பீடம் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பல்வேறு பொருட்களை கண்டெடுத்தனர். மேலும் பள்ளங்களை தோண்டி சிலைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories