எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர் மனைவி

by Staff / 14-06-2024 11:50:10am
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர் மனைவி

சிக்கிம் முதலமைச்சராக பிரேம் சிங் தமாங் பதவியேற்ற மறுநாளே அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் முதல் முறையாக நாம்ச்சி-சிங்கிதாங்கில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்கின் கட்சி சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்றது. இதனிடையே ஒரே குடும்பத்தின் ஆதிக்கம் மாநில ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க வாய்ப்புள்ளதாக கருதி முதலமைச்சர் தனது மனைவியை ராஜினாமா செய்ய கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

Tags :

Share via