3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 6 பேர் பலி

by Staff / 14-06-2024 11:44:16am
3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 6 பேர் பலி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருதிவெண்ணு தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் டிராக்டரை லாரி முந்திச் செல்ல முயன்றபோது, ​​எதிரே வந்த வேன் மீது மோதி மூன்று வாகனங்களும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via