தமிழகம் வரும் மோடி.. விடுதிகள் மூடல்

by Staff / 04-04-2023 03:28:22pm
தமிழகம் வரும் மோடி.. விடுதிகள் மூடல்

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமில் உள்ள யானைகள் மற்றும் பாகன் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம், சமீபத்தில் 'ஆஸ்கார்' விருதை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதியை முதுமலையில் சந்தித்து பாராட்ட பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதையடுத்து, முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையொட்டி 4 நாட்களுக்கு ஓய்வு விடுதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதுமலையில் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரை வனவிலங்குகளை காணும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via