சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1500க்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1500க்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே தின விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏப்ரல் 30 அன்று 475 பேருந்துகளும் மே 1 மற்றும் இரண்டாம் தேதிகளில் தலா 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர் போன்ற இடங்களுக்கு ஏப்ரல் 30-ல் இருந்து 85 பேருந்துகளும் அடுத்த இரண்டு நாட்களில் தலை 75 பெயர்களும் இயக்கப்பட உள்ளது, மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஆந்திரா போன்ற வழித்தடங்களுக்கு மே 2 வரை, நாள் ஒன்றுக்கு தல 14 சிறப்பு தெரிந்து கொள்ள இயக்கப்படுகிறது.. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் டி.என்.எஸ்.டி.சி இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்கூட்டியே இருக்கைகளை முன் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. பெங்களூரு ,திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுமார் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிகளுக்காக 615 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tags :
















