குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தலில் 15 மாநகராட்சிகளையும் பா.ஜ.க வென்றது.

by Admin / 29-04-2026 01:05:00am
குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தலில்  15 மாநகராட்சிகளையும் பா.ஜ.க வென்றது.

குஜராத் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 17 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிகள் களம் இறங்கின. இருப்பினும் பாஜக நடந்த தேர்தலில் 15 மாநகராட்சிகளையும் முழுமையாக தன் வசப்படுத்தியது. சுரேந்திரநக,ர் ஜாம்நக,ர் போர்பந்தர், கரம் சத் ஆனந்த் ,நாடி, நவ்சாரி, வாபி, சூரத், மோர்பி உள்பட 15 மாநகராட்சிகளையும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன... ஆம் ஆத்மி கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட சூரத் மாநகராட்சியிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. மோர்பி போர்பந்தர் மாநகராட்சிகளில் உள்ள 52 இடங்களையும் முழுமையாக பாஜக கைப்பற்றியுள்ளது. போட்டியின்றி 43 வேட்பாளர்கள் தேர்தல் நடத்துவதற்கு முன்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். குஜராத் மக்கள் பா.ஜ.க மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

Tags :

Share via

More stories

Logo