ஏலியனுக்கு கோவில் அமைத்து வழிபாடு

by Staff / 02-08-2024 04:22:22pm
ஏலியனுக்கு கோவில் அமைத்து வழிபாடு

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2021 முதல் இந்த கோவில் கட்டப்பட்டு வந்துள்ளது. இதுவரை எந்த இடத்திலும் ஏலியன் சித்தர் இல்லை. பூமிக்கு இனிமேல் ஏலியனின் வருகை அதிகமாகும். விரைவில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என லோகநாதன் கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo