உச்ச நீதிமன்றத்திற்கு ஒன்பது நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்...
உச்ச நீதிமன்றத்திற்கு ஒன்பது நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34. இந்த முழு எண்ணிக்கையும் நிரப்பப்படாமல் இருந்தது. சமீபத்தில், மூத்த நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் ஓய்வு பெற்றதை அடுத்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக குறைந்தது.
விரைவில் நீதிபதி நவீன் சின்ஹாவும் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 9 நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கி கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உள்பட 3 பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றத்திற்கு ஒன்பது நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Tags :