ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய மக்கள்

by Editor / 18-03-2022 05:30:41pm
ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய மக்கள்

வசந்த காலத்தை வரவேற்கும் வண்ணம் இலையுதிர் காலமான இந்த மார்ச் மாதத்தில்  ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எண்ணங்கள் அழகாக அமைய வண்ண பொடிகளை  கொண்டு கொண்டாட்டங்களில் வண்ணப்பண்டிகையான  ஹோலி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீமையை அழித்து  நன்மையை கொண்டாடும் வண்ணம்  வெற்றி கொண்டதை கொண்டாடும் பண்டிகையாக இந்தியாவின் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகையில், முதல் நாளான நேற்று சுட்டி ஹோலி  பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக ஹோலிகா தகன் என்ற நிகழ்ச்சி நடந்தது. பூஜை பொருட்கள், கட்டைகளை கொண்டு தீமூட்டும் இந்த நிகழ்ச்சி பெரும்பாலான வடமாநிலங்களில் நடத்தப்பட்டது. இதில் திரளான மக்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகளை செய்தனர். டெல்லியில் மேளதாளம் முழங்க மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

மேற்குவங்கம், பீகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

வட இந்தியாவில் நேற்று தொடங்கிய ஹோலி பண்டிகையில் மக்கள் வண்ண பொடி தூரிகைகள் கொண்டு ஒருவர் மீது ஒருவர் தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

வருடாவருடம் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் சென்னை நகரில் இந்த வருடம் சௌகார்பேட்டை, புரசைவாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணப் பொடிகளை வாங்க பொதுமக்கள் நேற்றிலிருந்தே ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இன்று காலை சமண, இந்துக் கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர் பலர் வண்ணப் பொடிகளை மாறி மாறி தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கர்நாடகாவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவண்ணம் ஹோலி பண்டிகையை கொண்டாட காவல்துறை பல்வேறு றிவுரைகளை வழங்க அனுமதி அளித்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு ஹோலியை கொண்டாடினர்.

 கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டுகுறைவாக நடைபெற்ற நிலையில் இந்த வருடம் அதிகப்படியான மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வண்ண பொடிவிற்பனை செய்யும் தொழிலாளர்களின் ம்மணத்தில் 2 வருடத்திற்குபின்னர் தற்போது நடக்கும் வண்ண பொடிகளின் விற்பனையால் பிராட்வே பகுதியில் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய மக்கள்
 

Tags : People who celebrated Holi festival in a special way

Share via