நகர்மன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

by Editor / 27-03-2025 12:17:09pm
நகர்மன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தின்போது, திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆவரங்காடு நகராட்சி தொடக்கப் பள்ளி 50ஆவது ஆண்டு பொன்விழா அழைப்பிதழில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பெயரை ஓரமாக அச்சிட்டதாக கூறி இந்த வாக்குவாதம் நடந்தது. இந்நிலையில் கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு, நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், நகராட்சி அதிகாரிகள் வெளியேறினர். அதிமுக உறுப்பினர்களை வேண்டுமென்றே ஓரங்கட்டுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
 

 

Tags :

Share via