திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை

by Editor / 24-07-2021 09:09:00am
திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த முறையும் திருவண்ணாமலை கிரிவலம் தடைசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில், மக்கள் பொது இடங்களில் கூடுவதை மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். கரோனா நடைமுறைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம், அதேபோல் கிரிவலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவதும் வழக்கம். இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிரிவலம் செல்ல இதற்கு முன்பே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறையும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். வரும் 23ஆம் தேதி காலை 10.38 மணிமுதல் 24ஆம் தேதி காலை 8.56 மணிவரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Tags :

Share via