மன அழுத்தம் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை
உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மன அழுத்தம் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில் BA Honours (Political Science) படித்து வந்த மாணவி வான்ஷிகா அரோரா (20). மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். விடுதியில் தனியாக தங்கியிருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















