சவுதி அரேபியாவில் உள்ள ஈரானியர்கள் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சவுதி அமைச்சகம் கோரி உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள ஈரானியர்கள் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சவுதி அமைச்சகம் கோரி உள்ளது. ஈரானியர்கள் சவுதி அரேபியா விட்டு உடனடியாக வெளியேறுமாறு சவுதி இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போதைய வளைகுடா பதற்றங்களுக்கு மத்தியில் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்கான், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க சவுதிக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார். ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சவுதி அரேபிய விமான நிலையங்கள், எரிசக்தி உள் கட்டமைப்புகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை தாக்கியதை தொடர்ந்து இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா ஈரானின் இத்தகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தனது நாட்டின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருதுவதாகவும் இதற்கு பதிலடி கொடுக்க தயார் என்றும் இளவரசர் பைசல்பின்பர்கான் எச்சரித்துள்ளார். வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திர தன்மையை உறுதி செய்ய அனைத்து வளங்களையும் பயன்படுத்த போவதாக சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளன. சவுதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கி ஈரான் இயங்கிய 4 பாலிசிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி பாதுகாப்பு படைகள் இடைமறித்து அழித்ததாகவும் தங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு என்றும் சவுதி தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :


















